Wednesday 26 December 2012

அர்ரஹ்மான் பைதுல்மால் முன்றாம் ஆண்டு துவக்க விழா.



அல்ஃபுர்கான்  சூளைமேடு அசோசியேஷன்னுக்கு கீல்  செயல்பட்டு  வரும் அர்ரஹ்மான்  பைதுல் மால்   கடந்த இரண்டு  வருட காலமாக சிறப்பாக இயங்கி வருகிறது.   அதன் முன்றாம் ஆண்டு துவக்க விழா அல்புர்கான் ஜுமுஆ  பள்ளி வாசலில் கடந்த 16.12.2012 
அன்று நடந்தது. அல்ஹம்துலில்லாஹ் இந்த விழாவில் முஹல்லா வாசிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் சகோதரர் முஹமது மொய்தீன் அவர்களும் அல்முஹ்மின் அறகட்டளை நிர்வாகி சகோதரர் செங்கிஸ்கான் அ வர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். அல் ஃபுர்கான் ஜுமுஆ பள்ளிவாசல் செயலாளர் சகோதரர் இபுராஹீம் அவர்கள் நிறைவுரை ஆற்றி அல்லாஹ்வின் கிருபையால்  அர்ரஹ்மான்  பைதுல் மால் முன்றாம் ஆண்டு துவக்க விழ இனிதே நிறைவுற்றது.    இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த விழாவின் புகைப்படங்கள் நமது இணையதளத்தில் வெளியிட படும்.

அல்புர்கான் ஜுமுஆ பள்ளியின் 2013 ஆண்டிற்கான காலண்டர் விநியோகம்.


2013 வருடத்தின்  காலண்டர் அல்புர்கான் ஜுமுஆ  பள்ளி   சார்பாக இலவசமாக விநியோகம்  செய்யப்பட்டது.

Wednesday 24 October 2012

இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்!

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் நம்முடைய சகோதரர்களின் தஃவா வினாலும் ஏராளமானோர் இந்த தீனுல் இஸ்லாம்  மட்டுமே இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம் என்பதை உணர்ந்து     இந்த சத்திய மார்கத்தின் பக்கம் வருகிறாகள்.

 சென்னை மைலாப்பூரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் அவர்கள்  மீரான் முஹம்மது ஆக தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

 சூளைமேடு அல்புர்கான் ஜுமுஆ மர்கஸில் பள்ளியின் தலைவர் சகோதரர் தப்ரேஸ் அவர்கள் திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்க, மாலிக் அவர்கள் திருக்குர்ஆன் மொழியாக்கத்தை வழங்கினார்.அல்ஹ்ம்துலில்லாஹ்!

Sunday 14 October 2012

சகோதரர் P .ஜைனுல் ஆபிதீன்

சகோதரர் P .ஜைனுல் ஆபிதீன் (TNTJ  தலைவர் ) அவர்கள் உடல் நலம் சரி இல்லை என்பதாக அறிகிறோம் .  அவர்கள் உடல் நிலை குணமாக வேண்டி வாசகர்கள் இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டு கொள்கிறோம் .

அல் ஃபுர்கான் ஜுமுஆ பள்ளிவாசலில் பெண்கள் பயான்

அல் ஃபுர்கான் ஜுமுஆ பள்ளிவாசலில் 12-10-2012 வெள்ளி கிழமை மஹ்ரிஃப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.

 மெஹராஜ் ஃபாத்திமா ஆலிமா ( ஜும்மா சிந்தனைகள் நிகழ்ச்சி தொகுப்பளர் ) அவர்கள் இஸ்லாமிய பெண்களின் எழுச்சி என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்.


பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் .

 இன்ஷா அல்லாஹ் விரைவில் குருந்தகடு ( CD ) வெளியீடபடும்.

Monday 8 October 2012

பள்ளிவாசலின் விரிவாக்க பணிகள்.

பள்ளிவாசலுக்கு ஜுமுஆ தொழுகைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் இடம் பற்றாகுறை ஏற்பட்டு  உள்ளது. பள்ளிக்கு அருகில் சுமார் 850 சதுர அடி பரப்பளவில்  ருபாய் 48 லட்சதிற்கு விலைக்கு வருகிறது. மேற்கண்ட இடத்தை விலைக்கு வாங்குவது என்று ஜமாஅத்தார்கள் ஒன்று கூடி முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு சதுர அடியின் விலை INR6500 (பத்திர பதிவு உட்பட)


எவர்  அல்லாஹ்வின்  முகத்தை நாடி மஸ்ஜித் (இறையில்லம்) ஒன்றைக் கட்டுகிறாரோ, அதுபோன்று (மாளிகை) ஒன்றை, சுவர்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் 
                                                   நபிமொழி : புகாரி 450

அல்லாஹ்வின் பள்ளிக்கு மேற்கண்ட இடத்தை வாங்குவதற்கு நிர்வாகத்திடம் பொருளாதார வசதி இல்லை ஆகவே இந்த இடத்தை வாங்குவதற்கு பொருளாதார உதவியை உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றோம். பொருளாதார  உதவி  செய்பவர்களுக்கு அல்லாஹ் இம்மையிளும் மறுமையிலும் சிறப்பான  வாழ்கையை  தந்தருள்வானாக. ஆமீன்   

              ALFURKAN CHOOLAIMEDU ASSOCIATION  A/C.NO 842376000 (INDIAN BANK CHHOLAIMEDU BRANCH)    
 
என்ற பெயரில் DD அல்லது CHEQUE  எடுத்து கீழ் கண்ட முகவரிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
 
அல்ஃபுர்கான்  சூளைமேடு அசோசியேசன்  
141, மேற்கு நமச்சிவாயபுரம், சூளைமேடு, சென்னை.600094  

                                                தொடர்புக்கு. 

    தலைவர்                            செயலாளர்                          பொருளாளர்
 A.சம்சு தப்ரேஸ்          S.முஹம்மத் இப்ராஹீம்              M.சம்சுதீன்  
   9840572018                             9841113221                               7871946234




அல்ஃபுர்கான் சூளைமேடு அசோசியேசனின் செயல் பாடுகள்


அல்ஃபுர்கான்  சூளைமேடு அசோசியேசன்  நிர்வாகத்தின் கீழ் அல்ஃபுர்கான் ஜுமுஆ பள்ளி இயங்கி வருகிறது.
பள்ளியில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஐந்து வேளை தொழுகை மற்றும் ஜுமுஆ  நடைபெற்று வருகிறது  மேலும் மாலையில் மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பெண்களுக்கும் மார்க்க கல்வி (மதரஸா)  நடைபெற்று வருகிறது  ஒவ்வொரு வெள்ளி கிழமையும்  மக்ரிப்  முதல் இஷா  வரை  பெண்களுக்கு பயான் (மார்க்க சொற்பொழிவு) நடை பெற்று வருகிறது.  ஒவ்வொரு  ஞாயிறு காலை ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு ஆண்களுக்கான தர்பியா நடைபெற்று வருகிறது

சமுக சேவையாக மருத்துவ முகாம். இரத்த தான முகாம் போன்ற பல சமுக சேவைகள் செய்து வருகிறோம். 

கடந்த முன்று வருட காலமாக அர்ரஹ்மான்  பைதுல் மால் சிறப்பாக இயங்கி வருகிறது. இதன் கீழ்  அழகிய நகை கடன் கொடுத்து வருகிறோம் . மேலும் ஜக்காத் வசூல் செய்து ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி செய்து வருகிறோம். ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கத்னா (சுன்னத்) செய்ய படுகிறது.  வியாபாரத்தில் நலிவடைந்தவர்களுக்கும் உதவி செய்யபடுகிறது,   

மேலும் சதக்கா வசூல் செய்து  முகல்லாவை  சார்த்த பத்து ஏழை குடும்பத்திற்கு மாதம் தோறும் (INR 1000 மதிப்புள்ள ) மளிகை பொருட்கள் வின்யோகிக்க படுகிறது.